என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆயுஷ்மான் பாரத் யோஜனா
நீங்கள் தேடியது "ஆயுஷ்மான் பாரத் யோஜனா"
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பில் ஒதுக்கப்பட வேண்டிய 40 சதவீத நிதியை ஒதுக்க முடியாது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamataBanerjee #AyushmanBharatYojana
கொல்கத்தா:
இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும் என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமாக இந்த திட்டம் கருதப்படுகிறது. இந்த திட்டம் ‘‘ஆயுஷ்மான் பாரத்’’ என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசினாலும், மீதித் தொகையை மாநில அரசுகளும் ஏற்கும். இதனால் நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் மிக எளிதாக பயன்பெறுவார்கள்.
இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பில் ஒதுக்கப்பட வேண்டிய 40 சதவீத நிதியை ஒதுக்க முடியாது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பில் ஒதுக்கப்பட வேண்டிய 40 சதவீத நிதியை எங்களால் ஒதுக்கமுடியாது. மாநிலத்தில் இந்த திட்டத்தை தொடர விரும்பினால் மத்திய அரசு முழு நிதியையும் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #MamataBanerjee #AyushmanBharatYojana
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X